1. வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்லுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்)
2. ஈத்தம் பழம் அல்லது அதுபோன்ற இனிப்பு பண்டத்தை மென்று குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்)
حنکوا أولادکم بالتمر، فکذا فعل رسول الله (صلي الله عليه و آله و سلم) بالحسن و الحسين (عليهماالسلام) (حر عاملي، 1367، ج 15، ص 137)
3. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துர்பாவிலிருந்து சிறிய அளவை குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்)
حنکوا اولادکم بتربه الحسين (عليه السلام) فانه امان (نوري، 1408، ج 15، ص 138)
4. கூடுதலாக வெள்ளை நிறத்திலான துணிகளைக் கொண்டு குழந்தையைப் போர்த்துதல், அணிவித்தல். குறிப்பாக, மஞ்சல் நிறத்தைத் தவிர்ந்துகொள்ளல்.
لما ولدت فاطمه (عليهاالسلام) الحسن (عليه السلام) أخرج إلي رسول الله (صلي الله عليه و آله و سلم) في خرقه صفراء، فقال (صلي الله عليه و آله و سلم) ألم أنهکم أن تلفوه في خرقه صفراء، ثم رمي بها و أخذ خرقه بيضاء فلفه فيها (مجلسي، 1403، ج 104، ص 109)
5. குழந்தைக்கு நற்பெயரைச் சூட்டுதல். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரைத் தெரிவுசெய்து கொள்ளல். தவறினால், குழந்தை பிறந்து ஏழாம் நாளில் அகீகாவுடன் பெயரைத் தெரிவு செய்து சூட்டுதல்.
6. குழந்தையின் பெயர் நல்ல பொருளைக் கொண்டதாக இருத்தல் அல்லது இஸ்லாமிய ஆளுமையாளர்களின் பெயர்களாக இருத்தல் (உதாரணமாக, அப்துல்லாஹ் அல்லாஹ்வின் அடியார், தகி, நகி, முர்தஸா போன்றவை)
7. அகீகா கொடுத்தல்: சில பிக்ஹ் அறிஞர்கள் வாஜிப் என்று குறிப்பிட்டிருந்தபோதிலும், இது வலியுறுத்தப்பட்ட முஸ்தஹப்பாகும். ஆடு, மாடு, ஒட்டகை ஆகிய விலங்குகளில் ஒன்றாக இருத்தல் வேண்டும். ஆண்குழந்தைக்கு ஆண் விலங்கும், பெண்குழந்தைக்கு பெண் விலங்கும் கொடுத்தல். ஓட்டகையாயின் ஐந்து வருடங்கள் குறையாமலிருத்தல் வேண்டும். மாடு எனில் இரண்டு வருடங்கள் குறையாது இருத்தல் வேண்டும். ஆடு, வெள்ளாடு எனில் ஒரு வருடம் குறையாது இருத்தல் வேண்டும். செம்மறி ஆடு போன்றவை எனில் ஏழு மாதங்களுக்கு குறையாது இருத்தல் வேண்டும். குழந்தையின் உறவினர்கள் யாரும் இதனைச் செய்யலாம். தந்தைதான் கொடுத்தல் வேண்டும் என்பது நிபந்தனையில்லை. அகீகா உணவை குழந்தையின் தந்தையின் பராமரிப்பில் உள்ளோர் உண்பது மக்றூஹ் ஆகும். தாய்க்கு கடுமையான மக்றூஹ் ஆகும். அகீகாவை சமைத்தும் கொடுக்கலாம் அல்லது சமைக்காமல் கொடுக்கலாம். இரண்டிற்கும் அனுமதியுண்டு. அகீகாவைப் பெறுவோர் முஃமின்களாக இருத்தல் வேண்டும். ஏழைகளை முற்படுத்துவது சிறந்தது. செல்வந்தர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை. அகீகாவுக்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா கொடுக்க முடியாது.
அகீகாவுக்காக எதையாவது அறுத்துப்பலியிடும்போது பின்வரும் துஆவை ஓதுதல்.
بِسْمِ اللَّهِ وَ بِاللَّهِ اللَّهُمَّ عَقِیقَةٌ عَنْ فُلَانٍ لَحْمُهَا بِلَحْمِهِ وَ دَمُهَا بِدَمِهِ وَ عَظْمُهَا بِعَظْمِهِ اللَّهُمَّ اجْعَلْهُ وِقَاءً لآِلِ مُحَمَّدٍ صلی الله علیه و آله یا قَوْمِ إِنِّی بَرِیءٌ مِمَّا تُشْرِکُونَ إِنِّی وَجَّهْتُ وَجْهِیَ لِلَّذِی فَطَرَ السَّمَاوَاتِ وَ الْأَرْضَ حَنِیفاً مُسْلِماً وَ مَا أَنَا مِنَ الْمُشْرِکِینَ إِنَّ صَلَاتِی وَ نُسُکِی وَ مَحْیَایَ وَ مَمَاتِی لِلَّهِ رَبِّ الْعَالَمِینَ لَا شَرِیکَ لَهُ وَ بِذَلِکَ أُمِرْتُ وَ أَنَا مِنَ الْمُسْلِمِینَ اللَّهُمَّ مِنْکَ وَ لَکَ بِسْمِ اللَّهِ وَ اللَّهُ أَکْبَرُ اللَّهُمَّ صَلِّ عَلَی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ تَقَبَّلْ مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ بسْمِ اللَّهِ وَ بِاللَّهِ وَ الْحَمْدُ لِلَّهِ وَ اللَّهُ أَکْبَرُ إِیمَاناً بِاللَّهِ وَ ثَنَاءً عَلَی رَسُولِ اللَّهِ صلی الله علیه و آله وَ الْعِصْمَةُ لِأَمْرِهِ وَ الشُّکْرُ لِرِزْقِهِ وَ الْمَعْرِفَةُ بِفَضْلِهِ عَلَیْنَا أَهْلَ الْبَیْتِ
.
ஆண்குழந்தையாக இருந்தால் இதனையும் சேர்த்துக்கொள்ளவும்.
اللَّهُمَّ إِنَّکَ وَهَبْتَ لَنَا ذَکَراً وَ أَنْتَ أَعْلَمُ بِمَا وَهَبْتَ وَ مِنْکَ مَا أَعْطَیْتَ وَ کُلَّمَا صَنَعْنَا فَتَقَبَّلْهُ مِنَّا عَلَی سُنَّتِکَ وَ سُنَّةِ نَبِیِّکَ صلی الله علیه و آله وَ اخْسَأْ عَنَّا الشَّیْطَانَ الرَّجِیمَ لَکَ سُفِکَتِ الدِّمَاءُ لَا شَرِیکَ لَکَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِینَ
.
8. முடியை சிரைத்தல், அதன் நிறைக்கு தங்கம் அல்லது வெள்ளியின் பெறுமானத்திற்கு சதகா கொடுத்தல் முஸ்தஹப்பாகும். இதுவும் ஏழாம் நாளில் நிகழ்வதாகும்.