1) ‘அல்லாஹ்வின் திருத்தூதரின் பேரர் இமாம் ஹுஸைன்; (அலை) நீளமாக விழுந்து, தாகத்தால் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட உறவினர்களின் சடலங்கள் சூழப்பட்டுள்ள கர்பலாவின் இரத்தக் களஞ்சியமான நிலப்பரப்பின் நினைவூட்டல், எந்த நேரத்திலும், மிகவும் மந்தமான மற்றும் ஆழ்ந்த உணர்வுகளை கூட இதயத்தில் இருந்து தோண்டி எடுக்கும் வல்லமை மிக்கது. இதற்கு முன்பு உலகப்பற்றுள்ள துயரங்கள், வலி, ஆபத்து மற்றும் இறப்பு ஆகியவை முன்னிலைப்படுத்தப்படாத அற்பமானவையாகும்.’
– எட்வர்ட் ஜி. பிரவுன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அரபி மற்றும் ஓரியண்டல் ஆய்வுகள் பேராசிரியர்
2) ‘இஸ்லாத்தின் முன்னேற்றம் அதன் விசுவாசிகளால் வீசப்பட்ட வாள் சார்ந்தது இல்லை. மாறாக, ஹுஸைன்; எனும் ஒரு பெரிய துறவியின் உயர்ந்த தியாகத்தின் விளைவு.’
‘ஒடுக்கப்பட்ட நிலையில் வெற்றியை எப்படி அடைவது என்பதை ஹூசைனில் நான் கற்றுக்கொண்டேன்.’
— மகாத்மா காந்தி (இந்திய அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்)
3) ஹுஸைனின் தியாகம் ஆன்மீக விடுதலையைக் குறிக்கிறது. நீதி மற்றும் உண்மைக்கு உயிரூட்டுவதற்காக இராணுவம் மற்றும் ஆயுதங்களுக்கு பதிலாக, உயிர்களை தியாகம் செய்வதன் மூலம் வெற்றியை அடைவது இமாம் ஹுஸைன்; அவர்களது வழியாகும்.
– கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
4) ‘கர்பலாவின் துன்பத்திலிருந்து நாம் பெறும் சிறந்த பாடம் ஹுஸைன்; மற்றும் அவரது தோழர்கள் பேரழிவின் போது அல்லாஹ் மீது கடுமையான நம்பிக்கை வைத்த விசுவாசிகளே என்பதாகும். தர்மம், அதர்மம் என்று வரும் போது எதிரிகளின் இராணுவம் எவ்வளவு பெரியது என்பதை கணக்கில் கொள்ளாது சிறுபான்மையினராக இருந்தாலும் சத்தியத்தை காக்க உயிர்களை தியாகம் செய்த ஹூசைனின் அணுகுமுறை என்னை ஆச்சரியப்படுத்துகிறது! ‘
– தாமஸ் கார்லைல் (ஸ்காட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் கட்டுரையாளர்)
5) ‘ஹூசைன் தனது உலக ஆசைகளை அடையப் போராடியிருந்தால் அவருடைய சகோதரி, மனைவி மற்றும் பிள்ளைகள் ஏன் அவருடன் சென்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர் முற்றிலும் இஸ்லாத்திற்காக தம்மை தியாகம் செய்தார் என்பதற்கு, இதுவே சான்றாகும்.’
– சார்லஸ் டிக்கன்ஸ் (ஆங்கில நாவலாசிரியர்)
6) ‘நவீன மற்றும் கடந்த கால சரித்திர வரலாற்றில், கர்பலா யுத்தத்தில் ஹுஸைனின் தியாகத்தை விட அதிக படிப்பினைகளைக் கற்றுதந்த, மக்கள் மத்தியில் அதிக அனுதாபமும், அதிக வியப்பையும் ஈட்டிய போர் ஒன்றுமில்லை.
– அண்டோய்னே பரா (லெபனீசிய எழுத்தாளர்)
7) ‘இமாம் ஹுஸைன்; பல ஆண்டுகளுக்கு முன்பு உயிர் தியாகம் செய்திருந்தாலும், அவரது அழியாத ஆத்மா இன்றும் மக்களின் இருதயங்களை ஆளுகிறது.’
—– டாக்டர் ராதா கிருஷ்ணன்
8) ‘இமாம் ஹுஸைன்; அவரது தியாகம் அனைத்து குழுக்களுக்கும், சமூகங்களுக்கும், மனிதநேய சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதி பாதையின் உதாரணமாகும்.’
— திரு.ஜவஹர்லால் நேரு
9) ‘இமாம் ஹுஸைன்; அவரது தியாகம் ஒரு நாடு அல்லது தேசத்துக்காக வரையறுக்கப்பட வில்லை, அவரது தியாகம் மனிதகுல சகோதரத்துவத்தின் பரம்பரை நிலையாகும்.’
– டாக்டர் ராஜேந்திர பிரசாத்
10) ‘இஸ்லாம் உயிருடன் உலகம் முழுவதும் பரவுதற்குக் காரணம், இமாம் ஹுஸைன் அவர்களது தியாகம் இல்லையெனில் இஸ்லாத்தின் பெயரை உச்சரிக்க யாரும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.’
– சுவாமி ஷங்கராச்சாரியா
இமாம் ஹுஸைன் (அலை) தனது தியாகத்தின் நோக்கத்தை தனது சொந்த வார்த்தைகளில் விளக்குகிறார்:
‘நான் இந்த நிலைப்பாட்டை அகந்தை அல்லது பெருமை ஆகியவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளவில்லை. என் பாட்டனாரின் சமூகத்தில் சீர்திருத்தம் செய்யவும், நல்லதைச் செய்யவும் விரும்புகிறேன், தீமையைத் தடுக்க விரும்புகிறேன், என் பாட்டனார் மற்றும் என் தந்தை அலி பின் அபீ தாலிப் ஆகியோரின் பாரம்பரியத்தை முஸ்லீம் சமூகம் பின்பற்றுவதற்கு வழியமைக்க விரும்புகிறேன்.’