இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம்

ஹிஜ்ரி 220வது வருடம், துல்கஃதா மாதம் பிறை இறுதியில் அஹ்லுல்பதை இமாம்களில் ஒன்பதாவது இமாமாகிய இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஷஹாதத் தினமாகும்.

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துல்கஃதா மாதத்தின் இறுதியில், அப்போதைய அப்பாஸிய மன்னர் முஃதஸிம் என்பவரின் கட்டளையின் பிரகாரம், இமாம் அவர்களின் மனைவியரில் ஒருவரான அப்பாஸிய மன்னர் மஃமூனின் மகள் உம்முல் பழ்ல் என்பவரின் மூலமாக நஞ்சூட்டப்பட்டு தனது 25வது வயதில் பக்தாத் நகரில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள்.

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது 8வது வயதில் இமாமத் எனும் நபிகள் நாயகம் ஸல்லல்லா{ஹ அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதித்துவத்தினை அடைந்து தனது 25வது வயதில் ஷஹாதத்தை அடைந்தார்கள். இளம்வயதில் ஷஹீதான ஒரே இமாம் இவர்களே.

இமாம் அவர்கள், மஃமூன் மற்றும் முஃதஸிம் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தார்கள். இமாம் அவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் அப்பாஸிய ஆட்சியாளர்களுக்கு எந்தளவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்துகொள்வற்கு அவர்களின் ஷஹாதத்தே சான்றாக அமைகின்றது.

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையான இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது புதல்வரான இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் பற்றி கூறுகையில், ‘அவர் உண்மை பேசுபவராகவும், பொறுமையாளராகவும், பல சிறப்புக்களை உடையவராகவும், முஃமின்களின் கண்ணுக்கு குளிர்ச்சியானவராகவும், இறைநிராகரிப்பாளர்களின் பார்வைக்கு கோபத்தினை உண்டாக்குபவருமாக இருக்கிறார்;.’ என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆதாரம்: உயூனுல் அக்பாரில் ரிழா (அலை): பாகம் 01, பக்கம் 250.

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்:
‘மரணம் என்பது ஒவ்வொரு இரவும் உங்களிடம் வரும் தூக்கம் போன்றதே. ஆனால், அது மிகவும் நீண்டதோர் காலமாகும். மனிதர்கள் இந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழும்புவதாயின் மறுமை நாளிலேதான் எழும்புவார்கள். ஒருவர் தன்னுடைய தூக்கத்தில் எண்ணிலடங்காத சந்தோஷமான கனவுகளையும், அவ்வாறே மிகவும் அச்சத்தினை ஏற்படுத்தக்கூடிய பயங்கர கனவுகளையும் காணக்கூடும். நல்ல கனவுகளைக் கண்டு மகிழ்வுறும் அல்லது கெட்ட கனவுகளைக் கண்டு அச்சமுறும் நபர்களின் நிலை என்ன?. இதுவே மரணமாகும்;. எனவே, உங்களை நீங்கள் அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்’.

ஆதாரம்: மஆனியுல் அக்பார்: பக்கம் 289, ஹதீஸ் எண் 5.

இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கான ஸலவாத்

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ مُوسَى عَلَمِ التُّقَى وَ نُورِ الْهُدَى وَ مَعْدِنِ الْوَفَاءِ

‘இறைவா! முஹம்மது பின் அலீ பின் மூஸா அவர்கள் மீது ஸலவாத் கூறுவாயாக! அவர் இறையச்சத்தின் அடையாளமாகவும், நேர்வழியின் ஒளியாகவும், வாக்களித்தால் அதை நிறைவேற்றுவோரின் மையமாகவும் இருக்கிறார்கள்’

وَ فَرْعِ الْأَزْكِيَاءِ وَ خَلِيفَةِ الْأَوْصِيَاءِ وَ أَمِينِكَ عَلَى وَحْيِكَ

‘உளத்தூய்மையானோர் பின்பற்றும் ஒருவராகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லா{ஹ அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்களினால் பொறுப்பாக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாகவும், உனது வஹி எனும் அமானிதத்தை பாதுகாப்பவராகவும் இருக்கிறார்கள்.’

اللَّهُمَّ فَكَمَا هَدَيْتَ بِهِ مِنَ الضَّلاَلَةِ وَ اسْتَنْقَذْتَ بِهِ مِنَ الْحَيْرَةِ وَ أَرْشَدْتَ بِهِ مَنِ اهْتَدَى وَ زَكَّيْتَ بِهِ مَنْ تَزَكَّى

‘இறைவா! உனது படைப்புக்களை அவர் மூலம் வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு கொண்டுவந்தாய். அறியாமை எனும் பள்ளத்தாக்கிலிருந்து அவர் மூலம் பாதுகாத்தாய். யாருக்கெல்லாம் நேர்வழியினைப் பெறும் தகுதி இருந்ததோ அவர்களை அவர் மூலம் நேர்வழிப்படுத்தினாய். யாரெல்லாம் உளத்தூய்மையை அடைய முயற்சித்தார்களோ அவர் மூலம் அவர்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்தி வைத்தாய்.’

فَصَلِّ عَلَيْهِ أَفْضَلَ مَا صَلَّيْتَ عَلَى أَحَدٍ مِنْ أَوْلِيَائِكَ وَ بَقِيَّةِ أَوْصِيَائِكَ إِنَّكَ عَزِيزٌ حَكِيمٌ

‘எனவே, இறைவா! உனது ஏனைய பிரதிநிதிகள் மற்றும் உனது நேசர்களுக்கு நீ ஸலவாத் கூறியதுபோல் மிகச்சிறந்த ஸலவாத்தினை அவர் மீது கூறுவாயாக! நிச்சயமாக நீ மிக கண்ணியமிக்கவனும், முடிவில்லா ஞானம் உடையவனுமாக இருக்கிறாய்.’

ஷியாரத் இமாம் ஜவாத் அலைஹிஸ்ஸலாம்

 

السَّلامُ عَلَيكَ يا أبا جَعفَرٍ مُحَمَّدَ بنَ عَلِيٍّ البَرَّ التَّقِيَ الإمام الوَفِيَّ

السَّلامُ عَلَيكَ أيُّها الرَّضِيُّ الزَّكِيُّ، السَّلامُ عَلَيكَ يا وَلِيَّ اللهِ السَّلامُ عَلَيكَ يا نَجِيَّ اللهِ

السَّلامُ عَلَيكَ يا سِرِّ اللهِ السَّلامُ عَلَيكَ يا ضِياءَ اللهِ السَّلامُ عَلَيكَ يا سَناءَ اللهِ

السَّلامُ عَلَيكَ يا كَلِمَةَ اللهِ السَّلامُ عَلَيكَ يا رَحمَةَ اللهِ، السَّلامُ عَلَيكَ أيُّها النُّورُ السَّاطِعُ

السَّلامُ عَلَيكَ أيُّها البَدرُ الطَّالِعُ السَّلامُ عَلَيكَ أيُّها الطَّيِّبُ مِنَ الطَّيِّبِينَ

السَّلامُ عَلَيكَ أيُّها الطَّاهِرُ مِنَ المُطَهَّرِينَ، السَّلامُ عَلَيكَ أيُّها الآيَةُ العُظمى

السَّلامُ عَلَيكَ أيُّها الحُجَّةُ الكُبرى، السَّلامُ عَلَيكَ أيُّها المُطَهَّرُ مِنَ الزَّلّاتِ

السَّلامُ عَلَيكَ أيُّها المُنَزَّهُ عَنِ المُعضِلاتِ السَّلامُ عَلَيكَ أيُّها العَلِيُّ عَن نَقصِ الأوصافِ

السَّلامُ عَلَيكَ أيُّها الرَّضِيُّ عِندَ الأشرافِ السَّلامُ عَلَيكَ يا عَمُودَ الدِّينِ.

أشهَدُ أنَّكَ وَلِيُّ اللهِ وَحُجَّتُهُ في أرضِهِ وَأنَّكَ جَنبُ اللهِ وَخِيَرَةُ اللهِ وَمُستَودَعُ عِلمِ اللهِ وَعِلمِ الأنبياءِ وَرُكنُ الإيمانِ وَتَرجُمانُ القُرآنِ،

وَأشهَدُ أنَّ مَنِ اتَّبَعَكَ عَلى الحَقِّ وَالهُدى وَأنَّ مَن أنكَرَكَ وَنَصَبَ لَكَ العَداوَةَ عَلى الضَّلالَةِ وَالرَّدى.

أبرأُ إلى اللهِ وَإلَيكَ مِنهُم في الدُّنيا وَالآخِرةِ وَالسَّلامُ عَلَيكَ ما بَقِيتُ وَبَقِيَ اللَيلُ وَالنَّهارُ.

Scroll to Top
Scroll to Top