ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும்

Hajj and the Concept of Islamic Unity

ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம்.

இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அனைத்து இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளையும் ஒன்றிணைப்பது என்பதும் சாத்தியமற்ற ஒன்று. எவ்வாறாயினும், இஸ்லாமிய ஒற்றுமை என்பது முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமியக் கொள்கைகளுக்கு தம் விசுவாசத்தை உறுதி செய்வதுடன் ஒரு உம்மத்தின் உருவாக்கத்தில் பின்வருவனவற்றை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்:

  • அணுகுமுறைகள், செய்முறைகள், வசதிகள், பார்வைகள், அறிவு நிலைகள், கலாச்சாரங்கள், புரிதல் முறைகள் ஆகியவற்றில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் வேறுபாடுகள் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான நம்பிக்கைகள் அனைத்தும் சில புரிந்துகொள்ளக்கூடிய கருத்து வேறுபாடுகளை பல நூற்றாண்டுகளாக நமது சிறந்த அறிஞர்களை ஆட்கொண்டுவந்துள்ளது.
  • 2-அவற்றில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம். அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:
  1. a)மறுக்க முடியாததாகக் கருதப்படும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
  2. இஸ்லாமிய உம்மத்தின் பொதுவான குணாதிசயங்களை உருவாக்கும் நற்பண்புகள் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் உம்மத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  3. தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாமிய ஷரியாவை கடைபிடித்தல்.மற்றும் இறைவனின் அனைத்து தீர்க்கதரிசிகளும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்த நியமிக்கப்பட்ட மறுக்க முடியாத இஸ்லாமிய சட்டங்களும்
  4. உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் நிலைப்பாடு குறிப்பாக இஸ்லாத்தின் முக்கிய எதிரிகளாக கருதப்படும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் மற்றும் திமிர்பிடித்த மனித விரோத சக்திகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இஸ்லாத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் ஒருமித்த நிலைப்பாடு.

மேலே பட்டியலிடப்பட்டவை இஸ்லாமிய சமூகம் ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டிய சில பகுதிகள் மட்டுமே என்றாலும் ஆகக்குறைந்தது இவை இடம்பெற்றால் உண்மையான முஸ்லிம் உம்மத் ஒன்றை உருவாக்க முடியும்.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இஸ்லாமிய ஒற்றுமையை நடைமுறைப்படுத்துவதற்கான இஸ்லாத்தின் விரிவான திட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதற்காக நாம் பின்வரும் விடயங்களில் உரிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.

  1. இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை என்பது நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது ‘இதயங்களின் ஒற்றுமை’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
  2. இஸ்லாம் அனைத்து முஸ்லிம்களையும் சமமாக எந்த பாகுபாடும் இல்லாமல் விழிக்கிறது மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான அவர்களின் பொதுவான பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
  • தற்புகழ்ச்சி மற்றும் உயர்வுமனப்பான்மை போன்ற அனைத்து உலக அளவுகோல்களையும் இஸ்லாம் நீக்கியுள்ளது; இறையச்சம், ஆன்மீக அறிவு, உளத்தூய்மையுடன் கீழ்ப்படிதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் முயற்சி செய்தல் போன்ற நற்பண்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.
  1. கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக கூட்டாக, இணைந்து போராட வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களை அழைக்கிறது.
  2. அனைத்து முஸ்லிம்களும் பொதுவான கிப்லாவை முன்னோக்குவதால், சமத்துவம், அருகாமை மற்றும் இஸ்லாமிய ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு விசுவாசிகளிடையே தேவையான ஞானத்தை உருவாக்குவதில் இஸ்லாமிய பிரார்த்தனை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ரமலான் மாதத்தில், முழு முஸ்லிம் உம்மாவும் விருப்பத்துடன், நோன்பு நோற்பதன் மூலம் சுய சுத்திகரிப்பு செயல்முறையில் நுழைந்து, அவர்களின் தெய்வீக மனித குணங்களை விரிவுபடுத்தி, இந்த குணங்களின் வேர்களை அவர்களின் இருப்பு மற்றும் ஆன்மாவில் ஆழப்படுத்துகிறது.

அதற்கு அடையாளமாக, ஹஜ் யாத்திரை – உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் பொருளிய மற்றும் ஆன்மீக வாழ்வில் ஒப்பிடமுடியாத நன்மைகளை அடைவதற்கும் – இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாகும்.

“ஏகத்துவம்”, “இறை பக்தி”, “ஏகனுக்கு விசுவாசம்”, “மனிதனால் உருவாக்கப்பட்ட தீய அமைப்புகள் மற்றும் சாத்தானிய நெறிமுறைகளுக்கு மறுப்பு”, “தெய்வீக வரம்புகள் மற்றும் செய்ய வேண்டியவைகளை கடைபிடித்தல்” போன்ற கருத்துகளுக்கு அர்த்தத்தை வழங்கியது மற்றும் செய்யக்கூடாதவை”, “மனித குலத்தினரிடையே பிளவை உருவாக்கும் அனைத்து பொருள் கூறுகளிலிருந்தும் விடுதலை”, மற்றும் “காஃபிர்களை நோக்கி பராஅத்தை வெளிப்படுத்துதல்” ஆகிய அனைத்துக்கும் ஹஜ் மகத்தான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

ஹஜ் மற்றும் பைத் அல்-ஹராமின் புனிதம் என்பன சில சிறந்த சமூகக் கருத்துகளின் உட்குறிப்பு ஆகும், அவை இங்கே சுருக்கமாக விவாதிக்கப்படுகிறது:

  • பாவை வலம் வருதல், மனிதன் சரீர இச்சைகள் மற்றும் விலகல்களிலிருந்து விடுதலையைத் தேடுவதையும், மதத்தின் ஏகத்துவக் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் இருப்பதையும் குறிக்கிறது. இஸ்லாமிய உம்மத்தினரிடையே ஒற்றுமையை வெளிப்படுத்த முயற்சிக்கும் தூய மற்றும் நேர்மையான இதயங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் ஹஜ் யாத்திரையின் சிறந்த நி’மத்களில் ஒன்று,
  • ஒவ்வொரு முஸ்லிமும் தனது இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அடக்குமுறை ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் மற்ற முஸ்லிம்களுடன் உரையாடி, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பத்தின் தேவையை ஹஜ் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது.

ஹஜ் என்பது அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒரு சர்வதேச மன்றமாகும். அவர்கள் தங்கள் சமூகங்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை மதிப்பாய்வு செய்து, பொருத்தமான தீர்வுகளைத் தேடவும், ஏனைய முஸ்லிம்கள் மற்றவர்களுக்குத் தங்களின் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக பல்வேறு வழிகள் மற்றும் அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், ஏகத்துவப் பாதையில் உள்ள தடைகள், அதற்கு எதிரான சதிகள் மற்றும் வஞ்சகமான சூழ்ச்சிகள் பற்றி அறிந்து அவற்றைக் கண்டிக்கவும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம். இந்த கருத்தை புனித குர்ஆன் இன்னும் தெளிவாக விளக்கப்படுத்துகிறது “(கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… (சூரா அல்-பகரா: 125)

  • புகலிடமான இந்த புனித ஸ்தலத்தினது பாதுகாப்பையும் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையின் மூலமே உறுதி செய்ய முடியும் என்பதையும், எனவே, அங்கு அதற்கு எதிராக எந்த விதமான கிளர்ச்சிக்கும் அல்லது நம்பிக்கையாளர்களை அச்சுறுத்துவதற்கும் இடமில்லை என்பதையும் ஹஜ் உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது. பாதுகாப்பு எனும் இந்த குறிக்கோள் உலகம் முழுவதும் நிறுவப்பட வேண்டும், அதை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி உலகளாவியதாக மாற்றுவது அனைத்து விசுவாசிகளின் மீதும் கடமையாகும்.
  • அன்பாலும் பாசத்தாலும் நிரம்பிய விசுவாசிகளின் இதயங்கள் இந்த புனித இடத்தின்பால் ஈர்க்கப்படுகின்றன, அங்கு அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அசுத்தங்களிலிருந்து விடுபட்டு தங்கள் சமூக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியவர்களாக உள்ளனர், அவர்களுடைய தூய அன்பு, கருணை மற்றும் பாசம் ஆகியவற்றின் செய்தியை தங்கள் சமுதாய உறுப்பினர்களிடையே பரப்புகையில், அவர்களின் சக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிறந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையை ஸ்தாபிப்பதற்கான பாதையை வகுத்துக் கொடுக்கிறது.

அன்பும் பாசமும் நிறைந்த ஹஜ்ஜின் உணர்ச்சிகரமான சூழல், சந்தேகத்திற்கு இடமின்றி, விசுவாசிகள் அல்லாஹ்வின் செய்தியை உள்வாங்குவதை சாத்தியமாக்குகிறது, நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.” 49:10

  • இந்த புனித ஆலயத்தின் (கஅபா) அருகாமையில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உலகின் பல்வேறு கூறுகளுக்கு இடையே ஒரு அற்புதமான இயற்கை நல்லிணக்க பாதையை வகுப்பதைக் குறிக்கிறது. இதை அடைவது மனிதனின் மிகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்று.

ஹஜ் மற்றும் மனிதனின் முழு வாழ்க்கையின் செயல்பாட்டில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயற்கையான இணக்கத்தை சுட்டிக்காட்டும் ஏராளமான போதனைகள் உள்ளன. உதாரணமாக, குலைனி குறிப்பிடுகின்றார்: “இமாம் முஹம்மது பாக்கர் (அலை) கூறுகிறார்: “மூஸா (அலை) எகிப்தில் உள்ள ரம்லா நகரில் தனது இஹ்ராமைத் தொடங்கி, ஒட்டகத்தின் மீது ஏறி, இரண்டு துண்டு பருத்தி ஆடைகளை அணிந்து மலைகளின் அடிவாரத்தைத் தாண்டி, லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று ஓதினார். அதற்கு மலைகள் பதிலளிக்க ஆரம்பித்தன”.

மற்றொரு இடத்தில் இமாம் முகமது பாக்கர் (அலை) இமாம் அலி (அலை) தம் தோழர்களிடம் இந்த வார்த்தைகளில் பேசியதை மேற்கோள் காட்டியுள்ளார்: “ஒரு யாத்ரீகர் ‘லப்பைக்’ என்று முழங்கத் தொடங்கும் போது, அவரது வலது மற்றும் இடதுபுறத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அவருடன் (இணைந்து) முழங்குகின்றன மற்றும் அவரை நோக்கி இரண்டு மலக்குகள் “அல்லாஹ்வின் அடியாரே, உங்களுக்கு நற்செய்தி, இதற்காக அல்லாஹ் சுவனத்தைத் தராமல் இருக்க மாட்டான்” என்று கூறுவார்கள்”.

இந்த குணாதிசயங்கள் மனிதனின் உலகக் கண்ணோட்டத்திலும் வாழ்க்கையிலும் நிச்சயமாக அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இறை தூதர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பூமியில் சர்வவல்லமையுள்ள இறைவனின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும், ஓர் இறையச்சமுள்ள முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முயற்சிக்கும் போது, முழு உலகமும் அவரை ஆதரிக்க தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது.

எனவே, ஹஜ் என்பது பலதரப்பட்ட பார்வை கோணங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும், ஒற்றுமை, சமநிலை, நிதானம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடைமுறை பாதையை வகுப்பதற்காக ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்கும் தூய இறை வழிபாடு என்று முடிவு செய்யலாம்.

Scroll to Top
Scroll to Top