ஆன்மாவின் நோன்பு
பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில், நோன்பு நோற்றிருந்த நிலையில் பெண்ணொருவர் வந்தார். அப்போது, பெருமானார் அப்பெண்ணுக்கு பாலை (அல்லது வேறொன்றை) பரிமாறி, ‘எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இறைத்தூதரே…! நான் நோன்பு நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். அதற்கு பெருமானார், ‘இல்லை, நீங்கள் நோன்போடு இல்லை, எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இல்லை, இறைத்தூதரே…! நான் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். மீண்டும் பெருமானார் அவர்கள், அருந்துமாறு வலியுறுத்தி வேண்டிக்கொண்டார்கள். ‘இல்லை. நான் நோன்போடு இருக்கிறேன், உண்மையில் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ […]