Author name: Peace

ஆன்மாவின் நோன்பு

  பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில், நோன்பு நோற்றிருந்த நிலையில் பெண்ணொருவர் வந்தார். அப்போது, பெருமானார் அப்பெண்ணுக்கு பாலை (அல்லது வேறொன்றை) பரிமாறி, ‘எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இறைத்தூதரே…! நான் நோன்பு நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். அதற்கு பெருமானார், ‘இல்லை, நீங்கள் நோன்போடு இல்லை, எடுத்து அருந்துங்கள்’ என்றார்கள். ‘இல்லை, இறைத்தூதரே…! நான் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ என்றார் அப்பெண். மீண்டும் பெருமானார் அவர்கள், அருந்துமாறு வலியுறுத்தி வேண்டிக்கொண்டார்கள். ‘இல்லை. நான் நோன்போடு இருக்கிறேன், உண்மையில் நோன்புதான் நோற்றிருக்கிறேன்’ […]

ஆன்மாவின் நோன்பு Read More »

ரமழானும், சுய முன்னேற்றமும்

  அருள்மிகு ரமழான் மாதமானது, சுய-முன்னேற்றத்திற்கு சிறந்ததோர் வாய்ப்பாகும். உண்மையில் நாம் ஒரு மூலப்பொருள் போன்றவர்கள். நாம் நம்மீது கவனம் செலுத்தி செயற்பட்டால், இம் மூலப்பொருளை மிகச்சிறந்த வடிவங்களுக்கு மாற்றியமைக்க முடியும். அவ்வாறு செய்தால், நாம் நமது வாழ்க்கையில் மிகவும் அவசியமான காரியமொன்றை நிறைவேற்றியோராக ஆகிவிடுவோம். இதுவே வாழ்க்கையின் இலக்காகும். அறிவுரீதியாகவும், செயற்பாட்டுரீதியாகவும் தங்களின்மீது கவனம் செலுத்தி செயற்படாதோருக்கு கைசேதம்தான். இவர்கள், இப்பூலோகத்திற்கு வந்திருந்த அதேநிலையிலே, ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாளில் ஏற்படுகின்ற தோல்விகள், சிதைவுகள், அழிவுகள்,

ரமழானும், சுய முன்னேற்றமும் Read More »

ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும்

  நோன்பு இருத்தலின் நோக்கமே, ‘தக்வா’ எனும் இறைபக்தியை உருவாக்கிக்கொள்வதாகும். அதுவே, அருள்மிகு ரமழான் மாதத்தில் எமது மிகப்பெரும் அடைவுகளில் ஒன்றாக இருக்கிறது. இம்மாதத்தின் அருளால், எமது நடத்தையில், எமது பேச்சில், எமது சிந்தனை-உணர்வுகளில் ‘தக்வா’ எனும் இறைபக்தியை, அப்பாரிய சுய-கட்டுப்பாட்டை அமுல்படுத்தவும், அதன்மூலம் மானுட சம்பூரணத்துவத்தோடு எம்மை ஒருங்கிணைக்கவும் நம்மால் முடியும். அல்லாஹு தஆலா, ‘தர்பிய்யா’ எனும் நெறிப்படுத்தலின்பால் தேவையுடையவனாக மனிதனைப் படைத்துள்ளான். மனிதனை புறவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவனை அகவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆத்மீக

ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும் Read More »

பொறுமை கொள்வோம்

பொறுமை கொள்வோம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘உங்களால் முடியுமானால் உறுதியோடு பொறுமையாக ஓர் செயலில் ஈடுபடுங்கள். உங்களால் முடியாதென்றால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் அறியாத பல நலவுகளைக் கண்டுகொள்வீர்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள் வெற்றியானது பொறுமையோடே இருக்கிறது. இன்பம், துன்பத்தை பின்தொடர்ந்தே உள்ளது. இலகுவான விடயங்கள் கடினத்தினை பின்தொடர்ந்தே உள்ளன. நிச்சயமாக ஒவ்வொரு கடினத்திற்குப் பின்னர் இலகுவான விடயங்கள் உள்ளன.’ (மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்: பாகம்

பொறுமை கொள்வோம் Read More »

அருள்மிகு ரமழான்

அருள்மிகு ரமழான் மாத நிகழ்ச்சித் திட்டமானது, அடிப்படையில் மனிதனை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். குறைபாடுடைய மனிதர்கள் இம்மாதத்திலே தங்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதற்கும், ஆரோக்கியமானவர்கள் தங்களை சம்பூரணமானவர்களாக மாற்றுவதற்குமான நிகழ்ச்சித் திட்டமாகும். அருள்மிகு ரமழான் மாத நிகழ்ச்சித் திட்டமானது, ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். குறைகளை நீக்கி, சரிசெய்வதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். மனோ-இச்சையின் மீது பகுத்தறிவும், இறைநம்பிக்கையும், சுயசித்தமும் ஆதிக்கம் செலுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். பிரார்த்தனைக்கான நிகழ்ச்சித் திட்டமாகும். அல்லாஹுவை வழிப்படுவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். இறைவனை நோக்கிப்

அருள்மிகு ரமழான் Read More »

நோன்பு துறக்கும் நேரம்

  ‘உங்களுக்குமுன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதுபோன்று உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆகுவீர்கள்’ (02:183) என்பது வான்மறையின் வசனமாகும். நோன்பு மாதத்தில் நோன்பாளியின் நல்லசெயல்கள் அனைத்தும் வணக்கமாகக் கணிக்கப்படுகிறது. நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானின் வருகையை முன்னிட்டு ஸஹாபாக்களுக்கு நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறினார்கள். ‘மனிதர்களே! பரக்கத்தும், அருளும், பாவமன்னிப்பும் உள்ள அல்லாஹ்வுடைய மாதம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. அது அல்லாஹ்விடத்தில் மாதங்களில் மிகச்சிறந்த மாதமாகும். அதன் நாட்கள், நாட்களிலெல்லாம்

நோன்பு துறக்கும் நேரம் Read More »

நமது வாழ்வில் இறையியலின் பிரதிபலிப்புகள்

The Signs of God in our Daily Life 1. இறையியலும் அறிவியல் வளர்ச்சியும் உங்களது நண்பர்களில் ஒருவர் பிரயாணமொன்றை மேற்கொண்டுவிட்டு மீண்டுவரும்போது உங்களுக்காக ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகக் கொண்டு வந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இது மிகவும் உயர்வான புத்தகமாகும். ஏனெனில், அதன் ஆசிரியர் ஒரு அறிஞர். அவர் மிகவும் கற்றுத் தேர்ந்தவர். அதிகமான தகவல்களைக் கொண்டுள்ளார். மேலும், அவர் நுணுக்கமானவர், திறமையானவர், தன்னுடைய துறையில் தேர்ச்சி பெற்றவர். சொல்லப்போனால் ஒரு பேராசிரியர்’ என்று உங்களிடம்

நமது வாழ்வில் இறையியலின் பிரதிபலிப்புகள் Read More »

Scroll to Top
Scroll to Top