Author name: Peace

இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல்

  இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஸஃதுல் கைர் என்பவருக்கு மடலொன்றை பின்வருமாறு எழுதியனுப்பினார். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உம்மை தக்வா எனும் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிக்கின்றேன். அழிவிலிருந்து ஈடேற்றமும், இறைவன் பக்கம் மீளக்கூடிய வழியும் அதிலே இருக்கிறது.’ (அல்-காபி, பாகம் 8, பக்கம் 52) ஆன்மீகத் தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரை: ஸஃத் இப்னு அப்துல் மலிக் என்பவர், ‘ஸஃதுல் கைர்’ என்று பிரபல்யமானவர். பரிசுத்த இமாம்களின் ஐந்தாவது இமாமாகிய இமாம் பாக்கிர் (அலை) அவர்கள் […]

இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல் Read More »

ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம்

அன்னை பாத்திமாவின் தூதே ஸலாம் நஜபின் சுல்தானின் மகளே ஸலாம் நைனவாவின் பொறுமையாளரே ஸலாம் ஆற்றல்மிகுந்த நபியின் பேரக்குழந்தையே ஸலாம் ஹஸனையின் விசுவாசம்கொண்ட சகோதரியே ஸலாம் துன்பங்களை சகித்துக்கொண்ட தமஸ்கஸின் ராணியாரே ஸலாம் வீரப் பிரசங்கத்தினால் சண்டாளர்களின் தூக்கத்தைக் கலைத்துவிட்ட வீரமங்கையே ஸலாம் சண்டாளர்களிடம் சிக்கிக்கொண்ட கர்பலாக் கைதிகளின் காப்பரணே ஸலாம் கொடுங்கோலன் யசீதினை நடுங்க வைத்த வீரமங்கையே ஸலாம் கர்பலாக் கதாநாயகனின் தூதரே ஸலாம் ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம் தமஸ்கஸ்ஸை தனதாக்கிக்கொண்ட அன்னையே ஸலாம்

ஒப்பற்ற ஹதீஜாவுக்கு ஒப்பானவரே ஸலாம் Read More »

ஆசானைப் பெற்றிராத மேதை – அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா

  அபு முர்தழா மஜீதி எந்தவொரு ஆசிரியரையும் பெற்றிராத ஒரு சாதாரண மாணவியாக இருந்து, சிந்தனையின் சிகரமாய் மாறிய அன்னை ஹஸரத் ஸைனப் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், அன்னை ஹஸரத் பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா மற்றும் ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் உன்னத மகளாவார். இவர், நபித்தோழர் ஹஸரத் அப்துல்லாஹ் பின் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரிசுத்த மனைவியும், இன்றுங்கூட நினைவுகளை மீட்டிக்கொண்டு நம் உள்ளங்களை அழவைக்கும் கர்பலாவின் கதாநாயகியும் இவரே. இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம்

ஆசானைப் பெற்றிராத மேதை – அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா Read More »

இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 01

  அபூ ஆஷிக் ஹுஸைன் உலகம் தோன்றிய காலம் தொட்டே எமக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து வரலாற்றுப் பதிவுகளையும் நாம் வாசிக்கும்போது, அவை ஒவ்வொன்றிலிருந்தும் தகுந்த படிப்பினைகளைப் பெற்று, அதன்படி எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே, வரலாற்றை கருத்தூண்டி வாசிப்போரின் இலக்காகும். இவ்வாறானதொரு இலக்கை கருத்திற்கொண்டே இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கர்பலா வரலாற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இஸ்லாம் என்பது ஒரு பரிபூரண வாழ்க்கைத் திட்டம் என்று கூறுவோரில் சிலர் ஆன்மீகத்தையும், அரசியலையும் வெவ்வேறாக்கி நோக்குவதற்கு பல

இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 01 Read More »

முஸ்லீம் அல்லாத அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பார்வையில் இமாம் ஹுஸைன் (அலை)

  1) ‘அல்லாஹ்வின் திருத்தூதரின் பேரர் இமாம் ஹுஸைன்; (அலை) நீளமாக விழுந்து, தாகத்தால் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட உறவினர்களின் சடலங்கள் சூழப்பட்டுள்ள கர்பலாவின் இரத்தக் களஞ்சியமான நிலப்பரப்பின் நினைவூட்டல், எந்த நேரத்திலும், மிகவும் மந்தமான மற்றும் ஆழ்ந்த உணர்வுகளை கூட இதயத்தில் இருந்து தோண்டி எடுக்கும் வல்லமை மிக்கது. இதற்கு முன்பு உலகப்பற்றுள்ள துயரங்கள், வலி, ஆபத்து மற்றும் இறப்பு ஆகியவை முன்னிலைப்படுத்தப்படாத அற்பமானவையாகும்.’ – எட்வர்ட் ஜி. பிரவுன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அரபி மற்றும்

முஸ்லீம் அல்லாத அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பார்வையில் இமாம் ஹுஸைன் (அலை) Read More »

துல் கஃதா 01: ஹஸரத் ஃபாத்திமா மஃஸூமாவின் பிறந்ததினம்

ஆக்கம்: ஆஷிகே மஃஸூமீன் இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் பிறந்த தினம் தொடர்பான ஒரு வரலாற்றுக் குறிப்பு. அஹ்லுல்பைத் இமாம்களின் வரிசையில் 7வது இமாமாக இருக்கின்ற இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா அவர்கள், மஃஸூமது கும் (கும் நகரின் புனிதப்பெண்), ஹஸ்ரத் மஃஸூமா என்றெல்லாம் பல்வேறு வகையில் உலக அஹ்லுல்பைத் நேசர்களின் மத்தியில் அறியப்படுகிறார். அன்னையவர்கள், இமாம் மூஸா

துல் கஃதா 01: ஹஸரத் ஃபாத்திமா மஃஸூமாவின் பிறந்ததினம் Read More »

குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை

  1. வலது காதில் அதானும், இடது காதில் இகாமத்தும் சொல்லுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) 2. ஈத்தம் பழம் அல்லது அதுபோன்ற இனிப்பு பண்டத்தை மென்று குழந்தையின் வாயில் இடுதல் (தக்வா, நற்பண்பு, இஸ்லாமிய அறிவு ஆகியவற்றில் சிறந்தோர் இதற்கு முற்படுத்தப்படல்) حنکوا أولادکم بالتمر، فکذا فعل رسول الله (صلي الله عليه و آله و سلم) بالحسن و الحسين (عليهماالسلام) (حر

குழந்தை பிறந்த பின்னர் செய்ய வேண்டியவை Read More »

Scroll to Top
Scroll to Top